காலியில் தந்தையை கடுமையாக தாக்கிய மகள் கைது

117

 

தந்தையைக் கடுமையாக தாக்கிய பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அஹுங்கல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.

பொலிஸ் விசாரணை
இந்நிலையில் காணித் தகராறு தொடர்பான பிரச்சினை தீவிரமடைந்ததை அடுத்து, பொலிஸ் சார்ஜன் தனது மகள் தன்னைத் தாக்கினார் என்று அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது பேருவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் சார்ஜன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் சார்ஜன் மகளும், முறைப்பாட்டாளரான தந்தையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றும், இதையடுத்து பெண் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE