ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் கடந்த ஒரு வருடமாக விடாமுயற்சி பற்றி தான் நினைத்துக்கொண்டே இருந்தனர். படத்தின் அறிவிப்பு வெளிவந்த பின்பும் ஏன் படப்பிடிப்பு துவங்கவில்லை என தொடர்ந்து பல கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது.
கடந்த ஜூன் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என உறுதியான தகவல் வெளிவந்தது. ஆனால், அப்போது துவங்கவில்லை. அதன்பின் ஒவ்வொரு மாதமாக படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
படப்பிடிப்பு
இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி துவங்கவுள்ளது என உறுதியாக தெரியவந்துள்ளது.
அபுதாபியில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கவுள்ளது. 40 நாட்கள் நடைபெரும் இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து திரிஷா மற்றும் ஹுமா குரேஷி கலந்துகொள்கிறார்கள். இவர்களை தவிர்த்து சஞ்சய் தத் மற்றும் ஆரவ் வில்லனாக நடிக்கிறார்கள் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ ஒரு வழியாக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கவுள்ளது, இனிமே அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் சரவெடி தான்.