லோகேஷ் கதை சொன்னாரு, விரைவில் அவருடன் இணைவேன்..லியோ படம் குறித்து பேசிய ஜெயம் ரவி

94

 

ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது. இயக்குனர் அஹமத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.

மிரட்டலான சைக்கோ த்ரில்லர் என்ற கதைக்களத்தில் தயார் ஆகியுள்ள இப்படம் ஜெயம் ரவிக்கு மாஸ் கம்பேக்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ
இந்நிலையில் இறைவன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் லோகேஷ் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், லோகேஷ் கனகராஜ் எனக்கு கதை சொல்லி இருந்தார். ஆனால் சில காரணங்கள் அது அப்போது முடியாமல் போனது. ஆனால் விரைவில் நாங்கள் இணைவோம் என்று கூறினார்.

லியோ படத்தின் ஏதாவது அப்டேட் தெரியுமா? என்ற கேள்விக்கு பதில் சொன்ன ஜெயம் ரவி, “அது தொழில் தர்மம் கிடையாது, லியோ படம் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

SHARE