வெளிவந்து 9 வருடங்கள் ஆகும் மாபெரும் வெற்றியடைந்த மெட்ராஸ் படத்தின் மொத்த வசூல்

103

 

தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத படங்களில் ஒன்று தான் மெட்ராஸ். எதார்த்தமான வாழ்வியலில் அரசியல் எப்படியெல்லாம் பாமரனின் வாழ்க்கையில் ஈடுபடுகிறது என்பதை எடுத்துக்காட்டினார் இயக்குனர் பா. ரஞ்சித்.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்தில் கார்த்தி, கலையரசன், கேத்ரின் தெரேசா, ரித்விகா என பலரும் நடித்திருந்தனர். மேலும் சந்தோஷ் நாராயணனின் இசை இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இன்றுடன் வெளிவந்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #9yearsofmadras என கொண்டாடி வருகிறார்கள்.

வசூல்
இந்நிலையில், 9 ஆண்டுகளாகியும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள மெட்ராஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

இது கார்த்தியின் திரை வாழ்க்கையில் புதிய வசூல் சாதனையையும் 2014ஆம் ஆண்டு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE