கனமழையால் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

104

 

கனமழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி பானந்துகம பிரதேசத்தில் இருந்து நில்வளா ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து சிறியளவிலான வௌ்ளப்பெருக்கு நிலைமை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தலகஹகொட பிரதேசத்தில் உள்ள நில்வளா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்
இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் கனமழை காரணமாக அதிகரித்து வருவதாகவும், ஜிங் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதுடன், பத்தேகம, தவலம பிரதேசங்களில் அவதான மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE