தொகுப்பாளினி பிரியங்காவின் வாழ்நாள் கனவு என்ன தெரியுமா?

77

 

பிரியங்கா என்றால் உடனே பலருக்கும் அந்த பெயரில் உள்ளவர்களை நியாபகம் வரலாம். ஆனால் சின்னத்திரையில் பிரியங்கா என்றால் உடனே நியாபகம் வருவது தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவை தான்.

அந்த அளவிற்கு தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தது முதல் மக்களை கவர்ந்த வண்ணம் உள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இவருக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது, எவ்வளவு தான் மற்றவர்கள் கலாய்த்தாலும் அசராமல் அவர்களுக்கே டப் கொடுப்பார்.

இப்போது விஜய்யில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் என தொகுத்து வழங்கி வருகிறார்.

வாழ்நாள் கனவு
அண்மையில் குடும்பத்துடன் வெளியே சென்று அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை தனது யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது கனவு குறித்து பேசியுள்ளார்.

விஜய் டிவியில் என்னோட முதல் டைரக்டர் நெல்சன் சார் தான், அவர்தான் ஒல்லி பெல்லி டைரக்ட் பண்ணாரு.

இந்த வேலையை தேர்ந்தெடுத்ததுக்கு பிறகு இதனை நிறைவேற்ற வேண்டும் என ஒரு கனவு வைத்திருப்போம், அப்படி எனக்கு இரண்டு கனவு இருக்கு. அதில் ஒன்று நேரம் வரும்போது கூறுகிறேன், ஆனா, முக்கியமா நான் செய்ய ஆசைப்படுற இன்னொரு விஷயம், ரஜினி சார்க்கூட ஒரு இண்டர்வியூ தான்.

ஒரு ரசிகையா அவரை பேட்டி எடுக்க வேண்டும் என்பது ஆசை, இப்போது வரை அவரை பார்த்தது இல்லை என கூறியிருக்கிறார்.

SHARE