இளைஞர்கள் கொண்டாடும் வகையில் சீரியல்கள் வருவது என்பது அழகு தான்.
கல்லூரி, அழகிய ஜோடி, ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு நாயகி, இளமை துள்ளும் வகையில் கதைக்களம் என எல்லாம் அமைந்த தொடராக விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது காற்றுக்கென்ன வேலி சீரியல்.
ரமேஷ் என்பவரின் இயக்கத்தில் தயாரான இந்த தொடரில் நாயகன் மாற்றம் அடைந்த பின்பும் வெற்றிகரமாக ஓடியது. 809 எபிசோடுகளோடு தற்போது சீரியல் முடிந்துள்ளது.
கடைசி எபிசோட்
போதை கடத்தல் வழக்கில் வெண்ணிலா சில சூழ்ச்சியால் கைதாக அவர் தவறு ஏதும் செய்யாதவர் என்பதை நிரூபிக்க சூர்யா நிறைய முயற்சிகள் எடுத்து வந்தார்.
இன்றைய எபிசோடில் வெண்ணிலா குற்றம் செய்யாதவர் என்பது நிரூபிக்கப்பட அவரது குடும்பம் சந்தோஷம் அடைகின்றனர்.
பின் வெண்ணிலா தனது வெற்றிகரமாக பரீட்சைகள் எழுதி IAS ஆனதாக தொடர் முடிக்கப்படுகிறது.
ஆனால் ரசிகர்கள் தொடரை முடித்திருக்க கூடாது, இன்னும் சூப்பரான கதைக்களத்துடன் தொடரை முடித்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.