பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ: மீனாவுக்கு வந்த சந்தேகம்

86

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மீனாவின் அப்பாவை குத்தியது ஜீவா, கதிர் தான் என பிரஷாந்த் பொய் சொல்லி போலீசில் சிக்க வைத்து இருக்கிறார்.

மீனாவும் அதை உண்மை என நம்பி பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறி அம்மா வீட்டுக்கு சென்றுவிடுகிறார்.

அடுத்த வார ப்ரோமோ
தற்போது அடுத்த வார எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பிரஷாந்த் தான் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக மாமனார் ஜனார்தனனை கொலை செய்ய செல்கிறார், ஆனால் அந்த நேரத்தில் மீனா சரியாக வந்துவிடுகிறார்.

பிரஷாந்த் டிஸ்சார்ஜ் ஆன பிறகும் ஹாஸ்பிடலில் இருப்பது ஏன் என மீனாவுக்கு ஒரு கட்டத்தில் சந்தேகம் எழுகிறது. அவர் கண்டுபிடிப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

SHARE