அதிரடி விதிமுறைகளால் அதிர்ச்சியடைந்த 6 போட்டியாளர்கள்

123

 

பிக் பாஸ் முதல் நாளே தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். ஆம், வெளிவந்த முதல் ப்ரோமோவில் வீட்டின் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 போட்டியாளர்களை இரண்டாவது வீடு, அதாவது ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியளிக்கும் வகையில் விதிமுறைகளை கூறியுள்ளார் பிக் பாஸ்.

ஷாக்கிங் விதிமுறைகள்
ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஒவ்வொரு வாரம் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 போட்டியாளர்கள் அனுப்பப்படுவார்கள். ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது. எந்த டாஸ்க்கிலும் பங்குபெற கூடாது. ஷாப்பிங் செய்ய முடியாது.

மூன்று வேலைக்கான உணவு என்னவென்று பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் தான் முடிவு செய்வார்கள், அதை தான் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமைத்து கொடுக்க வேண்டும். பிக் பாஸ் வீட்டை சுத்தம் செய்வது மற்றும் பாத்ரூம் சுத்தம் செய்தவது என இரண்டு வேலையையும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் 6 போட்டியாளர்கள் மட்டும் தான் செய்யவேண்டும். என அடுக்கடுக்காக அதிர்ச்சியான விதிமுறைகளை பிக் பாஸ் போட்டுள்ளார்.

இதை கேட்டு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்ற நிக்சன், அனன்யா, பாவா செல்லத்துரை, வினுஷா தேவி, ஐஷு மற்றும் ரவீனா அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டனர். எதிர்பார்த்ததை எதிர்பாருங்கள் என சும்மாவா சொன்னாரு கமல் சார்.

SHARE