உலக கிண்ண பயிற்சி போட்டி: இன்று மோதவிருக்கும் முக்கிய அணிகள்

180

 

இன்று நடைபெறவிருக்கின்ற உலக கிண்ண பயிற்சி போட்டியில் தென்னாபிரிக்கா – நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து- பங்காளதேஷ் அணிகள் மோதவிருக்கின்றன.

அத்தோடு 10 அணிகள் இடையிலான 13-வது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் வருகின்ற 5 ஆம் திகதி ஆமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தற்போது பயிற்சி போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

பயிற்சி போட்டிகள்

முதல் இரு நாள் நடைபெற்ற போட்டிகள் கன மழையின் காரணமாக இரத்து செய்யப்பட்டது, ஆகையால் இன்று இரு பயிற்சி போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் ஒரு போட்டியும் தென்னாபிரிக்காவும், நியூசிலாந்தும் மோதவிருப்பதோடு கவுகாத்தியில் நடக்கும் மற்றொரு பயிற்சி போட்டியில் இங்கிலாந்து – பங்காளதேஷ் அணிகள் மோதவிருக்கின்றன.

அத்தோடு நாளையுடன் இந்த பயிற்சி போட்டிகள் நிறைவடைகின்றதோடு, நாளை இந்திய அணி தனது கடைசி பயிற்சி போட்டியில் நெதர்லாந்தை திருவனந்தபுரத்தில் எதிர்கொள்கிறது.

SHARE