பிக் பாஸ் 7ம் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர்.
முதல் நாளே தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் வைத்து எல்லோருக்கும் நடுவில் வாக்குவாதத்தை பிக் பாஸ் தொடங்கிவிட்டார்.
நாமிநேஷன்
இந்நிலையில் இன்று முதல் வாரத்திற்கான நாமினேஷன் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டு வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் மற்ற வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது.
அதில் அதிகபட்சமாக 4 பேர் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவை தான் நாமினேட் செய்து இருந்தனர். மேலும் யுகேந்திரனுக்கு 3 ஓட்டு மற்றும் பிரதீப்புக்கு 3 ஓட்டு விழுந்ததால் அவர்களும் நாமினேட் ஆகி உள்ளனர்.
மொத்தமாக நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 7 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ..
ஜோவிகா- 4 ஓட்டுகள்
யுகேந்திரன் – 3 ஓட்டுகள்
பிரதீப் – 3 ஓட்டுகள்
பவா செல்லத்துரை
ஐஷு
அனன்யா
ரவீனா