பிக் பாஸ் 7ல் இன்று மூன்றாவது நாளின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் புதிதாக Know your house mates எனும் டாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்கில் விஷ்ணு மற்றும் மாயா இருவரும் மோதிக்கொள்கிறார்கள். முதல் நாள் வாக்குவாதம் மோதல் எதுவும் இல்லாமல் சென்ற நிலையில், நேற்றில் இருந்து கடும் வாக்குவாதங்கள் போட்டியாளர்கள் மத்தியில் துவங்கியது.
மாமனா மச்சானா
அதை தற்போது மூன்று நாள் டாஸ்கில் ‘அவன் என்ன எனக்கு மாமனா மச்சானா’ என போட்டியாளர்கள் பரபரப்பாக வாக்குவாதம் செய்துகொள்ளும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நேற்று மாயா விஷ்ணுவிற்கு இடையே சிறிதாக மோதல் ஏற்பட்ட நிலையில் இன்று இந்த டாஸ்கில் அது பெரிதாக மாறியுள்ளது. இன்று என்ன ஆகப்போகிறதோ, பொறுத்திருந்து பார்ப்போம்.