நடிகையை வளரவிடாமல் தடுத்த வடிவேலு.. விஜய் பட படப்பிடிப்பில் கண்ணீர்விட்டு அழுத நடிகை

75

 

வடிவேலு மீது பல நகைச்சுவை நடிகர் நடிகைகள் குற்றம் சாட்டி பேசியுள்ளனர். அதுவும் அவர் செய்த பல செயல்கள் குறித்து சமீபகாலமாக ஒவ்வொரு நடிகர்களும் பேசும் விஷயங்கள் சற்று ஷாக்கிங் ஆக இருக்கிறது.

ப்ரேமப்ரியா பேட்டி
இந்நிலையில், பிரபல நடிகை ப்ரேமப்ரியா தனது வளர்ச்சியை நடிகர் வடிவேலு தான் தடுத்து நிறுத்தினார் என பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த பேட்டியில் ‘சுறா படத்தில் இயக்குனர் ராஜ்குமார் மூலம் படத்தில் நடிக்க சென்றேன். அது வடிவேலு சாருக்கு தெரியாது. படப்பிடிப்பின் போது என்னை வடிவேலு சார் பார்த்துவிட்டார். யார் மூலமாக நடிக்க வந்துருக்க என்று என்னிடம் கேட்டார். இயக்குனர் மூலமாக தான் நடிக்க வந்தேன் சார் என கூறினேன்’.

கண்ணீர்விட்டு அழுத நடிகை
’பின் ஒரு காட்சியில் நானும் வடிவேலு சாரும் நடித்தோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் வடிவேலு சாரிடம் அதன்பின் பேசினேன்’.

’ஏன் சார் இப்படி பண்றீங்க, நீங்க எங்கேயோ இருக்கீங்க நான் இப்போ தான் வளர்ந்து வரேன். நான் நடிக்கவிருந்த பல படங்களில் என்னை நடிக்கவிடாமல் திருப்பி அனுப்பி வெச்சிடீங்க. என்ன காரணம் என கண்கலங்கி அழுதேன். நான் அழுததை பார்த்து ‘சரி விடு மா’ என கூறினார் வடிவேலு’. நடிகை ப்ரேமப்ரியாவின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

 

SHARE