அந்த இரண்டு பெண்களுக்கும் எச்சரிக்கை.. விஜய்யை தாக்கி பேசிய கமல்

109

 

பிக் பாஸ் 7ல் போட்டியாளர்கள் சில தினங்களுக்கு முன்பு வன்முறையாக பேசியது சர்ச்சை ஆனது. குறிப்பாக கேப்டனாக இருக்கும் விஜய் ‘எனக்கு வெளியே ஆள் இருக்காங்க..’ என சொல்லி அடிப்பது போல நடித்து காட்டி பேசியது சர்ச்சை ஆனது.

சமூக வலைத்தளங்களில் இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், இன்று பிக் பாஸ் ஷோவில் கமல் இது பற்றி பேசி எச்சரித்தார்.

Yellow கார்டு..
வன்முறையாக பேசியதற்காக விஜய்க்கு மஞ்சள் நிற கார்டை காட்டினார் கமல். இது போல மூன்று முறை Strike வாங்கினால் ஷோவில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும் பிரதீப் அப்பா – அம்மா பற்றி பேசி கிண்டல் செய்த விஜய்யை கமல் மறைமுகமாக எச்சரித்தார். மேலும் அதை கேட்டு சிரித்த இரண்டு பெண் போட்டியாளர்களுக்கும் yellow கார்டு காட்டி இருக்கலாம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

SHARE