நடிகர் அஜித் குறித்த உண்மையான விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அஜித் இப்படியெல்லாம் கூட செய்துள்ளாரா என அனைவரையும் அந்த விஷயம் வியப்பில் ஆழ்த்தும். அப்படி நம்மை வியக்க வைக்கும் ஒரு விஷயத்தை தான் அஜித் செய்துள்ளார்.
அஜித்தின் டிரைவர்
அஜித்தின் வீட்டில் டிரைவராக ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் வேறொருவரிடம் அஜித்தை பற்றிய மிகவும் தவறான முறையில் பேசி இருக்கிறார். இந்த தகவல் அஜித் காதுக்கு போக, ஆறு மாத சம்பளத்தை அந்த டிரைவருக்கு கொடுத்து, வேலையில் இருந்து தூக்கி விடுகிறார் அஜித்.
இதன்பின், சில மாதங்கள் கழித்து காவல் நிலையத்தில் இருந்து அஜித் வீட்டிற்கு போன் கால் வருகிறது. உங்களுடைய டிரைவரை கைது செய்து இருக்கிறோம். நான் அஜித்திடம் பணிபுரிகிறேன் என்று அவர் கூறியுள்ளார் என போலீஸ் தெரிவித்துள்ளனர். உடனடியாக தனது மேனேஜரை அனுப்பி அது என்ன விஷயம் என விசாரிக்க சொல்லி இருக்கிறார் அஜித்.
வியக்கவைக்கும் சம்பவம்
ரூ. 7 லட்சம் லோன் எடுத்து சொந்த வீடு ஒன்றை அந்த டிரைவர் வாங்கியுள்ளாராம். அஜித்திடம் வேலை பார்க்கிறோம், அதனால் கண்டிப்பாக வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்ததாக அந்த டிரைவர் கூறியுள்ளார். ஆனால், அதற்குள் வேலையில் இருந்து தூக்கிவிட்டதால் கடனை கட்டமுடியாமல் போக இப்படியோரு நிலைமை அந்த டிரைவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த அஜித், ‘அந்த டிரைவர் செய்தது தவறு தான். ஆனால், அவன் என்னை நம்பி தான் அந்த கடன் வாங்கி வீட்டை வாங்கியுள்ளார். ஆகையால் அந்த கடனை முழுமையாக அடைத்துவிட வேண்டியது என்னுடைய கடமை’ என அஜித் கூறினாராம். அதே போல் ரூ. 7 லட்சம் கடனை கட்டி, அந்த வீட்டை டிரைவருக்கு வாங்கி கொடுத்துள்ளார் அஜித்.