பாகிஸ்தானை பொளந்துகட்டிய இலங்கையின் குசால் மெண்டிஸ்! சிக்ஸர் அடித்து உலகக்கோப்பையில் அதிவேக சதம்

137

 

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இலங்கையின் விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் அதிரடி சதம் விளாசினார்.

நிசங்கா 51
ஐதராபாத்தில் நடந்து வரும் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் களமிறங்கி துடுப்பாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் 7 ஓட்டங்களில் அவுட் ஆன குசால் பெரேரா, இந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ஆனால் பதும் நிசங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஜோடி அதிரடியில் மிரட்டியது. நிதானமாக ஆடிய நிசங்கா 61 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் குசால் மெண்டிஸ் விஸ்வரூபம் எடுத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அவர் 65 பந்துகளில் சதம் விளாசினார்.

குசால் மெண்டிஸ் சாதனை
இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிவேக சதம் அடித்த இலங்கை வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். அதேபோல் சர்வதேச அளவில் உலகக்கோப்பையில் அதிவேக சதமடித்த 6வது வீரர் குசால் ஆவார்.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். குசால் மெண்டிஸ் 77 பந்துகளில் 6 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 122 ஓட்டங்கள் விளாசி ஹசன் அலி பந்துவீச்சில் அவுட் ஆனார்.

SHARE