வனிந்து ஹசரங்கவிற்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை

114

 

எல். பி. எல் போட்டியின் போது காலில் உபாதைக்கு உள்ளான வனிந்து ஹசரங்கவுக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தன்னுடைய x தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதோடு தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

அனைவருக்கும் வணக்கம்,

எனது தசைநார் குறைபாடுகளை சரிசெய்வதற்கான எனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த செயல்முறை முழுவதும் எனக்கு ஆதரவாக நின்று என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது குடும்பத்தினருக்கும், மனமார்ந்த நன்றிகள்.

எனது ரசிகர்களுக்காக நான் சீக்கிரம் திரும்பி வருவேன் என தெரிவித்துள்ளார்.

SHARE