லியோ படம் குறித்து பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன கூறினார் தெரியுமா

76

 

வருகிற 19ஆம் தேதி பிரமாண்டமான முறையில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார்.

மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளிவந்தது. சில சர்ச்சைகள் இதற்கு எழுந்தாலும், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விட்டது.

டிரைலரை தொடர்ந்து இன்று லியோ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகிறது. லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

வாழ்த்திய ரஜினிகாந்த்
இப்படத்திற்கான ஆபிஸ் பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், லியோ குறித்து ரஜினிகாந்தை லோகேஷ் சந்திக்க போகும் போதெல்லாம் கேட்டு கொண்டே இருப்பாராம் ரஜினி.

மேலும் லியோ படம் வெற்றிபெற சமீபத்தில் தன்னை ரஜினிகாந்த் வாழ்த்தியதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

SHARE