கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 14 OSயில் இயங்கக்கூடிய தனது புதிய Pixel 8 செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Pixel 8
உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் கூகுளின் Pixel 8 செல்போனின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
தற்போது Pixel 8 செல்போனை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 OSயில் இயங்கும் என தெரிய வந்துள்ளது.
முந்தைய மொடலான Pixel செல்போன்களில் புதிய ஆண்ட்ராய்டு OSயை பயனர்கள் அப்டேட் செய்துகொள்ளும் வசதியும் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
del-unveiled-with-android-14-by-googleஆண்ட்ராய்டு 14யில் உள்ள அம்சங்கள்
புதிய Operating System ஆண்ட்ராய்டு 14யில் Flash notification, Battery Health Percentage போன்ற பல வசதிகள் உள்ளன.
அதேபோல் செயலில் உள்ள DATA Sharing குறித்த எச்சரிக்கையை, இந்த புதிய OSயில் ஆண்ட்ராய்டு 14 பயனர்களுக்கு வழங்குகிறது.
pixel-8-model-unveiled-with-android-14-by-google
இது பாதுகாப்பில் கவனம் செலுத்தும் பயனர்களுக்கு பாரிய பயன்படான அப்டேட் ஆகும். பயனர்கள் தங்கள் செல்போன்களில் Install செய்துள்ள செயலி மற்றும் Data எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்களை புதிய ஆண்ட்ராய்டு 14 OS சிஸ்டம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
புதிய OS மூலம் புதிய செயலியை செல்போனில் Install செய்யும்போது அந்த செயலி உங்கள் தகவல்களை வேறு யாருக்காவது பகிர்ந்தால், அதுகுறித்த விவரங்கள் இனி உங்களுக்கு Notification ஆக வரும்.
Data Sharing வெளிப்படைத்தன்மையை இதன்மூலம் ஆண்ட்ராய்டு 14 நமக்கு காட்டுகிறது. மேலும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ள ஆண்ட்ராய்டு 14 உதவுகிறது.
அதேபோல் ஒவ்வொரு மாதமும் உங்கள் இருப்பிடம் குறித்த Data Sharing தகவல்களை ஆண்ட்ராய்டு 14 உங்களுக்கு தெரிவிக்கும். இதன்மூலம் நம்முடைய தகவல்கள் எவ்வாறு எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.