5 முறை சாம்பியன் தற்போது அதளபாதாளத்தில்..மோசமான தோல்விகளுக்கு அவுஸ்திரேலிய வீரர் கூறிய காரணம்

132

 

அழுத்தத்தின் கீழ் விளையாடுவதால் தோல்விகளை சந்தித்ததாகவும், ஆனால் இது முடிவல்ல எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுசாக்னே தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு மரண அடி கொடுத்த அணிகள்
லக்னோவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.

வார்னர், ஸ்மித், லபுசாக்னே, மேக்ஸ்வெல் என திறமையான துடுப்பாட்ட வீரர்கள் இருந்தும் அவுஸ்திரேலிய அணி 177 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மேலும் ஃபீல்டிங்கிலும் சொதப்பிய அவுஸ்திரேலிய வீரர்கள் மொத்தம் 6 கேட்ச்களை கோட்டை விட்டதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஐந்து முறை உலகக்கோப்பை சாம்பியனான அவுஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

லபுசாக்னே கூறிய காரணம்
இந்த நிலையில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லபுசாக்னே தோல்விக்கு காரணம் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தினால் நாங்கள் ஏமாற்றமடையலாம், நிறைய விடயங்கள் குறித்தும் ஏமாற்றமடையலாம்…ஆனால் உண்மை என்னவென்றால்உடை மற்றும் அறையில் வெறுமென அமர்ந்துகொண்டும், பதுங்கியும் இருக்க முடியாது.

மூன்று நாட்களில் இலங்கையை இங்கே எதிர்கொள்ள போகிறோம். நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும். இது எனது முதல் உலகக்கோப்பை, ஆனால் புள்ளிகள் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவோம். இங்கிருந்து ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று கருதுகிறேன் அல்லது குறைந்தபட்சமாக நான்கில் (அரையிறுதி) ஒன்றாக நுழைய வேண்டும்.

அவுஸ்திரேலியா ஐந்து முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது, மீண்டும் ஒருமுறை வெல்லும். நாங்கள் அழுத்தத்தின் கீழ் விளையாடுவதாலும், நன்றாக இன்னிங்சை தொடங்காததாலும் தான் தோல்வியுற்றுள்ளோம், ஆனால் இது முடிவல்ல ஆரம்பம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ‘நான் இங்கே வந்து சாக்கு கூற வரவில்லை. நாங்கள் அவுஸ்திரேலியாவுக்காக உலகக்கோப்பை விளையாடுகிறோம். நாங்கள் தயாராக இருக்க வேண்டும், அதை விட சிறப்பாக இருக்க வேண்டும்.

நாங்கள் உலகின் சிறந்த ஃபீல்டிங் தரப்புகளில் ஒரு அணி. அதைப் பற்றி பெருமைப்படுகிறோம். இன்று நாங்கள் அதை சரியாகப் பெறவில்லை. ஆனால், மீண்டும் நாங்கள் எழுந்து வருவோம், இந்த ரயிலை (கிரிக்கெட்) உருட்டுவோம்’ என்றார்.

 

SHARE