அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் திரிஷா நடித்து வருகிறார். இந்த விடாமுயற்சி படப்பிடிப்பில் கலை இயக்குனராக பணிபுரிந்து மிலன் நேற்று மரணடைந்தார்.
மிலன் மரணம் – மகன் எடுத்த முடிவு
இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அசர்பைஜானில் இருந்து சென்னைக்கு அவருடைய உடலை எடுத்து வர முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
மேலும் விடாமுயற்சியில் கலை இயக்குனராக பணிபுரிந்து வந்த மிலன் மரணமடைந்து விட்டதால், அவருடைய இடத்தில் இருந்து அனைத்து வேலைகளையும் அவருடைய மகன் தான் தற்போது பார்த்து கொள்கிறார் என தெரியவந்துள்ளது.