தற்போது தமிழ் நாட்டில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது லியோ படத்தின் ரிலீஸ். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்தே இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
மேலும் லியோ படத்தின் கிளைமாக்ஸில் பிரபல நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் லியோ படத்தின் பிரீ – புக்கிங் தொடங்கியதும் அப்பகுதியில் இருந்த எக்கச்சக்கமான விஜய் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு படத்தின் டிக்கெட்களை வாங்க முற்பட்டனர்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் போது தமிழ் நாட்டை விட கேரள ரசிகர்கள் விஜய்யின் லியோ படத்தை கொண்டாடி வருவது போல் தெரிகிறது.