பூவே உனக்காக படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் இருந்தது

90

 

விஜய்க்கு இன்று இவ்வளவு பெரிய இடம் தமிழ் சினிமாவில் கிடைத்துள்ளது என்றால் அதற்கு ஆரம்ப புள்ளி ‘பூவே உனக்காக’ திரைப்படம் தான். அப்படம் வெளிவரும் வரை நடிகர் விஜய்க்கு பெரிதும் எந்த ஒரு திரைபடமும் வெற்றியை தேடி தரவில்லை.

ஆனால், பூவே உனக்காக படம் நடிகர் விஜய்க்கு முதல் வெற்றியை மட்டுமின்றி மாபெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாகவும் அமைந்தது. விக்ரமன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சங்கீதா, நாகேஷ், நம்பியார், ஜெய் கணேஷ், மலேசியா வாசுதேவன், அஞ்சு அரவிந்த் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.தன்னுடைய காதல் தோல்வியடைந்தாலும் தான் காதலித்த பெண் அஞ்சு அரவிந்தின் காதல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கதாநாயகன் எடுக்கும் முயற்சி தான் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

அதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் தனது காதலிக்கு திருமணம் நடந்து முடிந்தவுடன் அந்த ஊரில் இருந்து விஜய் கிளம்பி விடுவார். இறுதி வசனமாக ‘இந்த சோகம் கூட எனக்கு சுகம் தான்’ என்று முடியும். இதுவே பூவே உனக்காக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி.

ஆனால், இப்படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டதாம். ஒன்றில் காதலியின் திருமணம் முடித்தவுடன் சோகத்துடன் விஜய் ஊரில் இருந்து கிளம்புவது போல் எடுத்துள்ளனர். அது தான் படத்தில் இடம்பெற்றுள்ளது.

மற்றொன்றில் விஜய்யின் மனைவி நான் தான் என பொய் சொல்லி படத்தில் என்ட்ரி கொடுக்கும் கதாநாயகி சங்கீதாவை கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் உண்மையாக இணைத்துவிடுவது போல் எடுத்துள்ளனர்.

இந்த காட்சி தான் படத்தில் இடம்பெறும் என கதாநாயகி சங்கீதா நினைத்துள்ளார். ஆனால், படத்தின் ப்ரீவ்யூ காட்சி பார்த்தபோது தான் கிளைமாக்ஸ் மாறியதே தனக்கு தெரிய தெரியவந்ததாக சங்கீதா தெரிவித்துள்ளார்.

SHARE