ரஜினி கோடி ரூபாய் சம்பளம் வாங்க காரணம் கமல் தான்

107

 

திரையுலகில் சக போட்டியாளர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் இருப்பது மிகவும் கடினமான விஷயம். அதை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன்.

இப்படி நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இவர்கள் இருவர் குறித்தும் பல சுவாரஸ்யமான, நாம் கேள்விப்படாத தகவல்கள் அவ்வப்போது வெளியாகும். அந்த வகையில் சூப்பரான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

கமல் செய்த விஷயம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தார். அந்த நேரத்தில் பல தயாரிப்பாளர்கள் அவருக்கு மிகவும் குறைவான சம்பளத்தை கொடுத்துள்ளனர்.

இதை கவனித்த கமல் உடனடியாக ரஜினியிடம் பேசியுள்ளார். நீங்கள் தற்போது சினிமாவின் உச்சத்தில் இருக்குறீர்கள். ஆனால், சில தயாரிப்பாளர்கள் உங்களை நன்றாக பயன்படுத்தி கொண்டு குறைவான சம்பளம் தருகிறார்கள். அதனால் இனி நீங்கள் நடிக்கும் படங்களுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கேளுங்கள் என கமல் கூறியுள்ளார்.

கமல் கூறிய பின்பு தான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் ரஜினிகாந்த் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE