எனக்கு திருமணம் ஆகாமல் போக இது ஒன்று தான் காரணம்: நடிகை சோனா

101

 

கவர்ச்சியாக பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் சோனா. அவர் வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

தற்போது சோனா அவரது வாழக்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஸ்மோக் என்ற வெப் சீரிஸை இயக்கி வருகிறார். அவர் சந்தித்த வலிகள், பிரச்சனைகள் என அனைத்தையும் அந்த கதையில் கூறி இருக்கிறாராம்.

திருமணம் ஆகல..
பிரெஸ் மீட்டில் பேசிய சோனா அவருக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்ற காரணத்தையும் கூறி இருக்கிறார்.

‘கவர்ச்சி நடிகை’ என எல்லோரும் என்னை அழைத்ததால் தான் எனக்கு திருமணம் கூட ஆகவில்லை. சினிமாவில் நடித்தால் அப்படித்த்தான் என நினைத்துவிட்டார்கள் எனவும் சோனா கூறியிருக்கிறார்.

SHARE