இந்தியாவில் இடம்பெற்று வரும் உலக கிண்ண தரவரிசையில் முதல் இடம் பிடித்த அணிகளின் விபரங்களை ஐ சி சி வெளியிட்டுள்ளது.
இதன்படி தாம் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்ற இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் முறையே முதலாம் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன.
மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பிடித்துள்ளன. அதேவேளை நடப்பு உலக சம்பியனான இங்கிலாந்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
இதனிடையே தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்ற இலங்கை அணி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
