பிரசாந்த், பிரபு தேவா, மோகனை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தில் இணைந்த பிரபலம்- யார் பாருங்க

111

 

இப்போது தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஒரே ஒரு படத்தை பற்றி தான் பேசி வருகிறார்கள், என்ன படம், விஜய்யின் லியோ தான்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நடித்துள்ள இப்படம் மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

வரும் அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக இருக்கிறது, ஆனால் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

தயாரிப்பு குழு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க கூறி நீதிமன்றம் எல்லாம் சென்றார்கள், ஆனால் எந்த பலனும் இல்லை.

தளபதி 68
இதற்கு நடுவில் விஜய்யின் 68வது படத்தின் தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க விஜய்யின் 68வது படம் தயாராகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகிய மூன்று பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது 90களில் நாயகனாக நடித்த இன்னொரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அவர் வேறுயாரும் இல்லை நடிகர் ஜெயராம் தானாம்.

 

SHARE