ஜவான் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா

110

 

நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கொண்டாடப்படுபவர்.

தென்னிந்திய சினிமாவை கலக்கிவந்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு முன்னணி நடிகரான ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் நாயகியாக நடித்து ஹிந்தி பட ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.

ஜவான்’ படம் ரூ.1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்தி திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நயன்தாரா நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. ஜவான் படத்தை தொடர்ந்து ஹிந்தி பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி பெரிய பட்ஜெட்டில் எடுக்க உள்ள பைஜு பாவ்ரா என்ற படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகையின் சம்பளம்
ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் காலடியடுத்து வைத்துள்ள நயன்தாரா அப்படத்திற்காக ரூ. 10 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.

எனவே அடுத்து நடிக்க பேச்சு வார்த்தையில் இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி படத்திற்காக நயன்தாரா ரூ. 13 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். அதற்கும் படக்குழு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE