லியோ படத்தை விட மாட்டோம்.. முக்கிய இடத்தில் வந்த பிரச்சனை

104

 

விஜய் படம் என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் ரிலீஸ் நேரத்தில் வரிசைகட்டி பல பிரச்சனைகள் வந்துவிடும்.

தற்போது அதிகாலை காட்சி போடக்கூடாது என தமிழக அரசே படத்திற்கு சிக்கலை கொடுத்து இருக்கிறது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் தயாரிப்பாளர், ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை.

விஜய் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருப்பதால் அவருக்கு இத்தனை சிக்கல்களை கொடுக்கிறது திமுக என விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஜெயிலர் படத்திற்கு கொடுக்காத பிரச்சனை விஜய்க்கு மட்டும் ஏன் என சீமான் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது கர்நாடகாவில் லியோ படத்திற்கு சிக்கல் ஒன்று வந்திருக்கிறது.

தமிழக அரசு காவிரி நீரை கேட்டால், நாங்கள் லியோ படத்தை இங்கே விடமாட்டோம் என வாட்டாள் நகராஜ் கூறி இருக்கிறார்.

லியோ ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறி இருக்கிறார்.

SHARE