இலங்கை அணியின் வீழ்ச்சி தொடர்பில் முரளிதரனின் கருத்து

152

 

இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து உறுப்பினர்களும் தலைமைத்துவத்தை பெற விரும்புவதால் தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (17) இரவு இடம்பெற்ற பாடசாலை கிரிக்கெட் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் பாடசாலை கிரிக்கெட் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

அதில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எவரேனும் ஒருவர் தலைவரான பின்னரே தன்னை அடையாளப்படுத்த முடியும் என்றால் அது தவறான விடயமாகும்.
நீங்கள் விளையாடும் விதத்திலயே வளர முடியுமே தவிர தலைவராகி அல்ல. தலைவரான பின்னர் நெருக்கடி நிலை ஏற்படும். அவர் சிறப்பாக விளையாடினாலும் அணி தோல்வியை தழுவினால் அவருக்கு எதிராகவே கருத்துக்கள் வரும். இதன்போது அவர் அதனை பொறுப்பேற்க வேண்டி வரும்.

எனது 20 வரு கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை விட சிறந்த தலைவர்கள் இருந்தனர். அதனை நீங்கள் ஏற்கவேண்டும். சில வீரர்கள் நம்மை விட சிறந்த திறமைகளை வெறிப்படுத்தலாம் என்பதை ஏற்கவேண்டும். நாம் பெறாமை கொள்ள கூடாது.

என்னால் மாத்திரமே அதனை செய்ய முடியும் என நினைக்க கூடாது. ஆனால் தற்போதை தலைமுறை அவ்வாறே காணப்படுகிறது. கடந்த 10 வருட காலமாக இதுவே இடம்பெறுகிறது. இதன் காரணமாகவே இலங்கை அணி வீழ்ச்சி பாதைக்கு சென்றது. அனைவரும் அணியின் தலைமைத்துவத்தை எதிர்பார்கின்றனர். 2015 முதல் 2023 வரை எத்தனை பேர் அணி தலைவராகியுள்ளனர். 10 விரல்கள் கூட போதாது அதனை கணக்கிடுவதற்கு” என்றார்.

SHARE