முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே விஜய்யின் லியோ செய்த அதிரடி வசூல்- இத்தனை கோடியா?

148

 

தடை அதை உடை என்ற பாடல் வசனம் போல் நடிகர் விஜய்யின் சமீபத்திய படங்கள் அனைத்தும் பிரச்சனைகளை தாண்டி தான் ரிலீஸ் ஆகிறது.

தமிழகத்தில் அதிகாலை காட்சி இல்லை, ஆந்திரா என பல இடங்களில் விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸிற்கு பிரச்சனை தான்.

ஆனால் ஒருவழியாக எல்லா பிரச்சனைகளும் முடிவடைந்து நேற்று அக்டோபர் 19 படம் ரிலீஸ் ஆகிவிட்டது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

பட பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் விஜய்யின் லியோ திரைப்படம் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். தமிழகத்தில் மட்டும் படம் ரூ. 34 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

வரும் நாட்களில் ஆயுத பூஜை விடுமுறைகள் உள்ளதால் படத்தின் வசூல் உயரும் என்கின்றனர்.

SHARE