இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் தமன்னாவின் திருமணம் குறித்து பல வதந்திகள் வெளியாகியுள்ளது.
தமன்னா – விஜய் வர்மா
ஆனால், இறுதியாக தன்னுடைய காதலன் யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசினார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தான் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் தமன்னா கூறினார்.
இதற்குமுன் தமன்னாவிற்கு திருமணம், பிரபல தொழிலதிபருடன் காதல் என செய்திகள் வெளிவந்த போதெல்லாம், அது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என கூறிய தமன்னா, முதல் முறையாக விஜய் வர்மாவுடன் இருக்கும் காதலை உறுதி செய்தார்.
பொது இடங்களில் இருவரும் ஒன்றும் செல்லும் புகைப்படங்கள், வீடியோ கூட வைரலானது. சில நெருக்கமான புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
தமன்னாவின் வருங்கால மாமியார்
தமன்னா – விஜய் வர்மா காதல் உறுதியான நிலையில் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என இருவருமே கூறவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய் வர்மாவின் தாயும், தமன்னாவின் வருங்கால மாமியாரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.