லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்கியுள்ள திரைப்படம் தான் லியோ. விஜய்-த்ரிஷா இருவரும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள்.
அதுவே ரசிகர்கள் படத்தை பெரிதும் எதிர்ப்பார்த்தார்கள் என்றே கூறலாம்.
அனிருத் இசை படத்திற்கு கூடுதல் பலம், நேற்று படு மாஸாக வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்போதே 1 வாரத்திற்கான படத்தின் ப்ரீ புக்கிங்கும் நடந்துவிட்டது.
வனிதா மகன்
இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா மகன் லியோ படத்தில் இருக்கிறார் என்ற தகவல் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் அர்ஜுனிடம் தான் லியோ இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய சில குடும்ப புகைப்படங்களை காண்பிப்பார், அதில் தனது மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் என்று காண்பிப்பார்.
அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான ஸ்ரீ ஹரிதான்.