பரபரப்பான போட்டியில் ஃபீல்டிங்கின்போது டான்ஸ் ஆடிய வார்னர்!

125

 

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கின்போது நடனமாடியது வைரலாகியுள்ளது.

வார்னர்-ஹெட் விளாசல்
தரம்சாலா மைதானத்தில் நடந்து வரும் உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா 388 ஓட்டங்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 109 (67) ஓட்டங்களும், டேவிட் வார்னர் 81 (65) ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 28 ஓவர்களில் 187 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் எல்லைக்கோட்டின் அருகே டேவிட் வார்னர் ஃபீல்டிங் செய்துகொண்டிருக்கிறார்.

ஸ்ரீவள்ளி பாடல்
அப்போது புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதனைக் கேட்டு vibe ஆன வார்னர், படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் போல் நடன அசைவுகளை செய்தார்.இதனைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் share செய்யப்பட்டு வருகிறது.

SHARE