மண்ணை கவ்வியது பங்களாதேஷ்: 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அபார வெற்றி

122

 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணியை 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இலக்கை நிர்ணயித்த நெதர்லாந்து
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்கள் குவித்து இருந்தது.

பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக எட்வர்ட்ஸ் 68 ஓட்டங்களையும், பரேசி 41 ஓட்டங்களையும் குவித்து அசத்தி இருந்தனர்.

அபார வெற்றி
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 42.2 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

பங்களாதேஷ் அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் மட்டும் அதிகபட்சமாக 35 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் பங்களாதேஷ் அணியை 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

 

SHARE