ஒரே நாளில் மோசமான அணியாக மாறி விட மாட்டோம்! இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்

131

 

ஒரே நாள் இரவில் நாங்கள் மோசமான அணியாக மாறி விட மாட்டோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

படுதோல்வி அடைந்த இங்கிலாந்து
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற இன்றைய லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 33.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

இதையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 25.4 ஓவர்கள் முடிவிலேயே 160 ஓட்டங்களை கடந்து போட்டியில் அபார வெற்றி பெற்றது.

கலங்கிய ஜோஸ் பட்லர்
இந்நிலையில் போட்டியின் முடிவில் தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், இங்கிலாந்து அணியின் கேப்டனான மிகவும் வருத்தம் கொள்கிறேன்.

எங்களிடம் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர், இருப்பினும் எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதது வருத்தமளிக்கிறது.

அதற்காக ஒரே நாளில் இரவில் நாங்கள் மிகவும் மோசமான அணியாக மாறி விட மாட்டோம், இனி வரும் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

SHARE