
இந்திய அணிக்கு எதிரான படுதோல்விக்கு அனைவரும் ஒரு அணியாக பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை அணியின் உதவி பயிற்சியாளர் நவீட் நவாஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“துடுப்பாட்ட வீரர்கள் பக்கம் இருந்து, பந்து ஸ்வீங் ஆனது என எம்மால் சொல்ல முடியாது. புதிய பந்துகள் என்பதால் நாங்கள் அதை எதிர்பார்க்கிறோம். பொதுவாக ஒரு போட்டிக்கு முன் அதற்காக தயாராகிய பிறகே நாங்கள் போட்டியில் விளையாடுவோம். முழு பொறுப்பையும் தவறையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற அபார வெற்றி, ஒருநாள் உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு அணி பெற்ற இரண்டாவது பெரிய வெற்றி என்ற சாதனையில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – ada derana