வடகிழக்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி உறுதி

306

இலங்கையில் நடைபெற்று முடிவடைந்திருக்கும் 2015ஆம் ஆண்டுக்கான 15வது பாராளுமன்றத்தேர்தலில் வடகிழக்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழ் மக்களுடைய தனித்துவத்தினை அடையாளப்படுத்தும் தேர்தலாக இம்முறைத் தேர்தல் அமையப்பெறுவதனால் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய வடகிழக்குப் பிரதேசத்தில் 60க்கும் மேற்பட்ட வாக்குவீதங்கள் பதியப்பட்டிருக்கின்றன. அதன்படி 22 மாவட்டங்களிலும் தேசியப்பட்டியல் உட்பட 225 ஆசனங்களை வென்றெடுப்பதற்காக 6451 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ள இந்நிலையில் 12314 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் 15444490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதுடன் இத்தேர்தலானது வன்முறைகள் குறைக்கப்பட்ட தேர்தலாக இடம்பெற்று முடிந்துள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினைப் பொறுத்தவரையிலும் போனஸ் ஆசனம் அடங்கலாக 18 ஆசனங்களைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாவட்ட ரீதியாகப் பார்க்கின்றபொழுது, பிற்பகல் 2.00 மணிவரையில் வவுனியா – 60, திருகோணமலை – 60, மட்டக்களப்பு – 60, யாழ்ப்பாணம் – 60 என்ற வாக்குவீதங்களின் அடிப்படையில் வாக்குகள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதிப்படுத்தப்படும் தகவல்களையடுத்தே எந்தெந்தக்கட்சிகள் எத்தனை ஆசனங்களைப் பெற்றிருக்கின்றன என்பது தெரியவரும்.

SHARE