விஜய் அரசியலுக்கு வரட்டும், ஆனால்.. வெற்றிமாறனின் பதிலை பாருங்க

103

 

நடிகர் விஜய் சினிமாவில் மாஸ் காட்டி வந்தாலும், அரசியலில் வருகையை உணர்த்தும் வகையில் அவ்வப்போது பேசி வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட படத்தை குறித்து பேசாமல் அதிகமாக அரசியல் வருகை பற்றி தான் பேசினார்.

அரசியல் வருகை
இந்நிலையில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், விஜய் அரசியலில் வர வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்பட்டு வருகிறார்.

அவர் அரசியலுக்கு வரட்டும். ஆனால் முன்னதாக அதற்கான கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அரசியல் என்பது அனைவர்க்கும் சவாலானது அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களே அரசியலுக்குள் வர விரும்புகிறார்கள் என்று வெற்றி மாறன் பேசியுள்ளார்.

SHARE