சிங்கநடை போட்டுவந்த தென் ஆப்பிரிக்காவை முடித்துவிட்ட ஜடேஜா! 83 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி

127

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

விராட் கோலி 49வது சதம்
கொல்கத்தாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 326 ஓட்டங்கள் குவித்தது. விராட் கோலி 101 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ஓட்டங்களும் விளாசினர்.

சுருண்ட தென் ஆப்பிரிக்கா
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஜடேஜாவின் மாயாஜால சூழலில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 83 ஓட்டங்களுக்கு சுருண்டது.

33 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த ஜடேஜா 5 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

நடப்பு தொடரில் அபாயகரமான அணியாக வலம் வந்த தென் ஆப்பிரிக்கா 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

SHARE