இரண்டாவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்த ஹரி கேன்! பாயர்ன் முனிச் மாஸ் வெற்றி

154

 

பண்டஸ்லிகா தொடரில் பாயர்ன் முனிச் அணி 4-0 என்ற கோல் கணக்கில் டோர்ட்முண்ட் அணியை வீழ்த்தியது.

தலையால் முட்டி கோல்
சிக்னல் இடுனா பார்க் மைதானத்தில் நடந்த பண்டஸ்லிகா போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் டோர்ட்முண்ட் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே பாயர்ன் அணி வீரர் டயோட் உபமேகானோ (Dayot Upamecano) Corner kickயில் இருந்து வந்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார்.

இதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் ஹரி கேன் 9வது நிமிடத்தில் அசால்ட்டாக கோல் அடித்தார். அதன் பின்னர் இரண்டாம் பாதியின் 72வது நிமிடத்தில் தன்னிடம் பாஸ் ஆகி வந்த பந்தை ஹரி கேன் கோலாக மாற்றினார்.

ஹரி கேன் இரண்டாவது ஹாட்ரிக்
பாயர்ன் முனிச் அடுத்தடுத்து கோல்கள் அடிக்க, டோர்ட்முண்ட் அணி ஒரு கோல் அடிக்க திணறியது. இறுதி நிமிடங்களில் (90+3) ஹரி கேன் தனது மூன்றாவது கோலை அடித்தார்.

இது அவருக்கு தொடர்ச்சியாக இரண்டாவது ஹாட்ரிக் ஆகும். கடைசி வரை டோர்ட்முண்ட் கோல் அடிக்காததால் பாயர்ன் முனிச் அணி 4-0 என்ற கணக்கில் மிரட்டல் வெற்றியை பெற்றது.

SHARE