ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் மோசமான சாதனை படைத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்!

133

 

பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி (Shaheen Afridi) மோசமான சாதனையை பதிவு செய்தார்.

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்களைக் கொடுத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற தேவையற்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்தப் போட்டியில் ஷாஹீன் 10 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 90 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

இதே போட்டியில் ஹரிஸ் ரவூப் 85 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தப் போட்டிக்கு முன், இந்த மோசமான சாதனையை ஹசன் அலி வைத்திருந்தார். மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிரான 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில், ஹசன் அலி 84 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டை வீழ்த்தினார்.

சமீபத்தில் இந்த போட்டியில், ஹசன் அலியின் சாதனையை முதலில் ஹரிஸ் ரவூப் முறியடிக்க, ஷஹீன் அப்ரிடி கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து இந்த மோசமான சாதனையை தன் பெயரில் எழுதிக்கொண்டார்.

கடந்த 24 ஒருநாள் போட்டிகளில் ஷாஹீன் அப்ரிடி ஒரு விக்கெட் கூட எடுக்காதது இதுவே முதல் முறை.

ஒருநாள் உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஓட்டங்களை கொடுத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்
ஷஹீன் அப்ரிடி – 0/90 – நியூசிலாந்து – பெங்களூர் 2023 (இன்றைய ஆட்டம்)

ஹாரிஸ் ரவூப் – 1/85 – நியூசிலாந்து – பெங்களூர் 2023 (இன்றைய ஆட்டம்)

ஹசன் அலி – 1/84 – இந்தியா – மான்செஸ்டர் 2019

ஹாரிஸ் ரவூப் – 3/83 – அவுஸ்திரேலியா – பெங்களூர் 2023

SHARE