சிறந்த நடிகராக வலம் வந்தவர்கள் இப்போது சினிமாவில் எங்கு உள்ளார்கள் என்று கேட்கும் அளவிற்கு காணாமல் போய்விட்டனர்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான் பாபி சிம்ஹா, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது விறுவிறுப்பாக தொடர்ந்து படங்கள் நடித்துவந்தவர் தேசிய விருது எல்லாம் பெற்று வளர்ந்தார்.
ஆனால் இப்போது அவர் அவ்வளவு ஆக்டீவாக படங்கள் நடிப்பது இல்லை என்பது ரசிகர்களின் வருத்தமாக உள்ளது. காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற முக்கிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
ஜிகர்தண்டா படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டி இருந்தார். அடுத்தடுத்து ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்பிறது, மசாலா படம், உறுமீன், பெங்களூர் நாட்கள், கோ 2, இறைவி, மெட்ரோ என படங்களாக நடித்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடிக்கிறார்.
சொத்து மதிப்பு
2016ம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனனை பாபி சிம்ஹா திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் பாபி சிம்ஹாவின் சொத்து மதிப்பு ரூ. 30 கோடி என கூறப்படுகிறது.