சூரியாவின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் இயக்குனர் பாலா. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
சூர்யா, பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தில் நடிக்க இருந்தார் இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் சில காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார்.
பாலா நச் பதில்
பாலாவுக்கும் சூர்யாவுக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக சூர்யா படத்தில் வெளியேறிவிட்டார் என கூறப்பட்டது.
சமீபத்தில் பாலாவிடம் நீங்கள் மீண்டும் சூர்யாவுடன் இணைவீர்களா என்று பத்திரிகையாளர் கேட்டார். இதற்கு பாலா, சூர்யா என் தம்பி மாதிரி, கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.