கொமடி நடிகர் செந்தில் வீட்டைவிட்டு ஓடிவந்த பட்ட துயரத்தை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் செந்தில்
தமிழ் சினிமாவில் கொமடி நடிகர்களில் முன்னணியில் திகழ்ந்த நடிகர் செந்திலின் கொமடியை இன்றும் யாராலும் மறக்கமுடியாது.
அந்த அளவிற்கு தனது கொமடியால் மக்களின் கவலையை மறக்க வைத்த செந்திலின் வாழைப்பழ காமெடி தான் இன்றுவரை ஹைலைட் என்று கூற வேண்டும்.
அதிலும் இவர் கவுண்டமணியுடன் இவர் நடித்த கொமடி வேற லெவல் என்று தான் கூற வேண்டும். ஆனால் இவர் கொமடியில் மக்களை சிரிக்க வைத்தாலும் இவர் கடந்து வந்த பாதை மிகவும் மோசமாகவே இருந்துள்ளது.
ஆம் ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார் செந்தில். இவரது தந்தைக்கு இவரை பிடிக்காமல் பலமுறை உதாசினப்படுத்திக் கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு மன வேதனையுடன் வெளியே வந்துள்ளார்.
தொடர்ந்து எண்ணெய் ஆட்டும் கடையிலும், மதுபானக்கடையிலும் பணியாற்றியுள்ளார். பின்பு நாடகத்துறையின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டிய இவருக்கு, மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படம் அறிமுக படமாகவும், மக்களுக்கு பிடித்த கொமடியனாகவும் மாற்றியது.
பின்பு பாட்டி சொல்லை தட்டாதே, கரகாட்டகாரன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.