உலகநாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- பிறந்தநாளில் வெளிவந்த தகவல்

107

 

கலை குடும்பத்தை சேர்ந்த கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து தங்கப்பன் என்ற நடன இயக்குனரிடம் உதவி நடன கலைஞராக பணியாற்றிய கமல், உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.

அதன்பின் பாலசந்தர் இயக்கத்தில் உருவான அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகராக மாறினார்.

அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த கமல், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடகர், கதை ஆசிரியர் என சினிமாவில் உள்ள எல்லா துரையிலும் கலக்கினார்.

பிரபலங்கள் பலரும் தொட நினைக்காத விஷயங்களை செய்து ஜெயித்தும் காட்டினார்.

சொத்து மதிப்பு
இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 388 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

SHARE