உலக கோப்பை தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
போட்டியில் 45.4 ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் குவித்து விளையாடி வருகிறது.
சதம் விளாசிய இப்ராஹிம் ஜத்ரான்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 134 பந்துகளில் 109 ஓட்டங்கள் குவித்து உலக கோப்பை முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இந்த சதத்தில் மொத்தம் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சரை இப்ராஹிம் ஜத்ரான் விளாசியுள்ளார்.