இந்தியா நடத்தும் 2023 ODI உலகக் கோப்பையில் பல பரபரப்பான போட்டிகள் மற்றும் பல சர்ச்சைகள் வெளிவந்துள்ளன. ஆனால் திங்கட்கிழமை (நவம்பர் 6) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஒரு சர்ச்சை வெளிச்சத்திற்கு வந்தது, இது பாரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இது இலங்கை பேட்ஸ்மேன் ஏஞ்சலோ மேத்யூஸின் கால தாமதத்தால் ஏற்பட்ட சர்ச்சை. சர்வதேச கிரிக்கெட்டில் Timed-Out முறையில் ஆட்டமிழந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற தேவையில்லாத சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் மேத்யூஸ்.
ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த பிறகு அடுத்த பேட்ஸ்மேன் இரண்டு நிமிடங்களில் களத்தில் இறங்க வேண்டும் என்பது கிரிக்கெட் விதி. எனினும், மேத்யூஸ் மைதானத்திற்கு தாமதமாக வந்ததால், பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப்-அல்-ஹசன் உட்பட அனைத்து வீரர்களும் மேத்யூஸை ஆட்டமிழக்க செய்யுமாறு நடுவர்களிடம் முறையிட்டனர். அதன்படி, நடுவர் அவரை அவுட் என அறிவித்தார். எனவே, கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரு வீரர் டைம்-அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
ஆனால், மேத்யூஸுக்கு முன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் ஒருமுறை Timed-Outல் இருந்து தப்பித்துவிட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா?
16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்
இது நடந்தது 16 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது கங்குலி அவுட்டாகியிருந்தால் இன்று மேத்யூஸ் இரண்டாவது பேட்ஸ்மேனாக இருந்திருப்பர். ஆனால் அந்த நேரத்தில், தாதா என்று அழைக்கப்படும் கங்குலி, Timed-Outல் இருந்து தப்பித்தார். அப்போது கங்குலி அவுட்டாகியிருந்தால் இன்று மேத்யூஸ் இரண்டாவது பேட்ஸ்மேனாக இருந்திருப்பர்.
இந்த நேரத்தில், கங்குலி எப்படி தப்பினார்? அது என்னவாக இருக்கும்? என்ற கேள்வி நிச்சயமாக ரசிகர்களின் மனதில் இருக்கும்.
2007ல் இந்திய ஆணை தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. கேப்டவுனில் இந்திய அணிக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருந்த போது, அந்த போட்டியின் நான்காவது நாளில், இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் வாசிம் ஜாபர் இருவரும் இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் வெறும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இரண்டு விக்கெட்டுகளை இழந்த பிறகு, சச்சின் டெண்டுல்கர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சச்சினால் களம் இறங்க முடியவில்லை. ஏனெனில், போட்டியின் மூன்றாவது நாளில் அவர் 18 நிமிடங்கள் மைதானத்திற்கு வெளியே இருந்தார். இதனால், இந்திய இன்னிங்ஸ் துவங்கியதும், சச்சின் 18 நிமிடங்கள் மைதானத்திற்கு வெளியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே விவிஎஸ் லட்சுமண் அல்லது சவுரவ் கங்குலி ஐந்தாவது இடத்தில் களம் இறங்க வேண்டும்.
ஜாஃபர் ஆட்டமிழந்த பிறகு கங்குலி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் களம் இறங்க தயாராக இல்லை. அப்போது கங்குலி டிரஸ்ஸிங் அறைக்கு வெளியே டிரக்கர் உடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். வி.வி.எஸ்.லக்ஷ்மன் குளிப்பதற்குச் சென்றிருந்தார்.
அந்த நேரத்தில், இந்திய அணியின் முழு ஆதரவு ஊழியர்களும் மற்ற வீரர்களும் கங்குலியை தயார் செய்யத் தொடங்கினர். ஒருவர் காலில் பட்டை கட்டிக் கொண்டிருந்தார், ஒருவர் ஷின் பேட் போட்டுக் கொண்டிருந்தார், ஒரு வீரர் கையுறையுடன் வந்தார், மற்றொரு வீரர் ஹெல்மெட்டுடன் நின்று கொண்டிருந்தார், அனைவரும் கங்குலி தயாராக உதவினார்கள்.
இவ்வளவு செய்தும், கங்குலி மைதானத்தை அடைய ஆறு நிமிடங்கள் தாமதமாகிவிட்டார். மறுபுறம், தென்னாப்பிரிக்க வீரர்கள் நடுவர்களுடன் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் களத்தில் நின்று கொண்டிருந்த இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்டிற்கு இந்த நிலை எல்லாம் தெரியவில்லை. அவருக்கும் சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை. சச்சின், கங்குலி, லக்ஷ்மன் யாரும் ஏன் களத்திற்கு வரவில்லை என்று டிராவிட் ஆச்சரியப்பட்டார்.
ஆறு நிமிடங்கள் தாமதமாக களம் இறங்கிய கங்குலியை பார்த்த நடுவர்கள், தென்னாப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித்துக்கு Timed-Out விதிகள் குறித்து யோசனை தெரிவித்தனர்.
அனால், அந்த நேரத்தில் கிரேம் ஸ்மித் தனது விளையாட்டுத் திறமையையும், துணிச்சலையும் வெளிப்படுத்தி, நடுவர்களிடம் முறையிடாமல், கங்குலியை விளையாட அனுமதித்தார். தென்னாப்பிரிக்க வீரர்களை தங்கள் பொசிஷனுக்கு திரும்புமாறு சைகை காட்டி, சிரித்துக்கொண்டே தனது பீல்டிங் பொசிஷனுக்கு சென்றார்.