ஹனிமூனில் கணவர் அசோக் செல்வன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை கீர்த்தி பாண்டியன்

102

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் அண்மையில் போர் தொழில் திரைப்படம் வெளியாகி இருந்தது.

கதைக்களம் அருமையாக அமைய மிகப்பெரிய வெற்றியை கண்டது. சினிமாவில் போர் தொழில் படம் மூலம் வெற்றிகண்ட அசோக் செல்வன் தனது வாழ்க்கையிலும் மிகப்பெரிய சந்தோஷத்தை அனுபவித்துள்ளார்.

வேறுஎன்ன திருமணம் தான், நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து அசோக் செல்வன் அண்மையில் திருமணம் செய்துகொண்டார். மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் எந்த ஒரு ஆரம்பரமும் இல்லாமல் நடந்தது.

ரசிகர்கள் அனைவரும் இந்த புதிய ஜோடிக்கு மனதார வாழ்த்துக்களை கூறியிருந்தனர்.

ஹனிமூன் போட்டோ
திருமணம் முடிந்து அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் ஹனிமூன் சென்றுள்ளனர்.

அங்கு அசோக் செல்வனின் 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கீர்த்தி பாண்டியன் போட்டுள்ள பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே, எனக்கு நிகழ்ந்த மிகப்பெரிய விஷயம் நீதான்.

உன் அன்பும் சந்தோஷமும் சிறந்ததாகவே இருக்கிறது. உன்னுடைய பரந்த மனதிற்காகவே நீ மிகுதியானவற்றை அடைவாய், என் மனிழ்ச்சியே நான் உன்னை நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

SHARE