சர்ச்சையான Timed Out விவகாரத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் மீது தவறில்லை – நடுவர் கூறிய விடயம்

114

 

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் Timed Out ஆகும் முன், நடுவர் அவரிடம் 30 வினாடிகள் இன்னும் இருக்கிறது என கூறியதாக தெரிய வந்துள்ளது.

Timed Out
டெல்லியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் களத்திற்கு வர தாமதமானதால் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவரிடம் முறையிட, Timed Out விதிமுறைப்படி அவுட் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஏமாற்றத்துடன் மேத்யூஸ் பெவிலியன் திரும்பினார். இந்த விடயம் கிரிக்கெட் உலகில் சர்ச்சையானது. மேத்யூஸ் தனது தரப்பு நியாயத்தை கூறினார். அதேபோல் ஷகிப் அல் ஹசன் தான் செய்தது சரிதான் என்று கூறினார்.

30 வினாடிகள்
இந்த நிலையில் மேத்யூஸ் மீது தவறு இல்லை என கள நடுவர் ரிச்சர்டு இல்லிங்வொர்த் தெரிவித்ததாக ESPNcricinfo கூறியுள்ளது.

துடுப்பாட்டம் செய்ய வந்த ஏஞ்சலோ மேத்யூஸிடம், பந்துவீச்சை எதிர்கொள்ள இன்னும் 30 வினாடிகள் உள்ளன என இல்லிங்வொர்த் கூறியுள்ளார்.

ஆனால், மேத்யூஸின் ஹெல்மெட்டில் Chin Strap உடைந்ததிருந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நிர்ணயிக்கப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குள் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராக இல்லை, அதன் விளைவாக Timed Out முறையில் வெளியேற்றப்பட்ட முதல் சர்வதேச வீரராக மேத்யூஸ் மாறினார்.

போட்டி அதிகாரிகளின் கவனக்குறைவு
இல்லிங்வொர்த் மேலும் கூறும்போது, மேத்யூஸ் மீது தவறு இல்லை என்றும், போட்டி அதிகாரிகள் தங்கள் பொது அறிவை பயன்படுத்தி உபகரண செயலிழப்பை பார்த்திருக்க வேண்டும் என்றார்.

உலகக்கோப்பைகளுக்கான ஐசிசியின் ஆட்ட நிலைமைகள், முந்தைய விக்கெட் வீழ்ந்த இரண்டு நிமிடங்களுக்குள் பந்துவீச்சை எதிர்கொள்ள புதிய துடுப்பாட்ட வீரர் தயாராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE